ETV Bharat / state

100 நாளை வேலை திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் - கஞ்சி கலையம் உடைத்து ஆர்ப்பாட்டம்! - அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் போராட்டம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பேரளத்தில் 100 நாள் வேலைதிட்டத்தை பேரூராட்சிகளுக்கு விரிவுபடுத்த வேண்டி கஞ்சி கலையம் உடைப்பு போராட்டம் நடைபெற்றது.

All India Agricultural Workers Union protest

author img

By

Published : Oct 7, 2020, 6:34 PM IST

Updated : Oct 7, 2020, 6:42 PM IST

திருவாரூர்: நூறு நாள் வேலைத்திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டுமென அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேரளம் பேரூராட்சி முன்பு நூறு நாள் வேலைத்திட்டத்தை பேரூராட்சிகளுக்கு விரிவுபடுத்த வேண்டி விவசாய தொழிலாளர்கள் கஞ்சி கலையத்தை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது நூறு நாள் வேலைத்திட்டம் கிராமங்களில் செயல்படுத்தப்பட்டுவரும் நிலையில் பேரூராட்சிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படாததால் விவசாய தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இன்றி வாழ்வாதாரம் இழந்து ஒருவேலை கஞ்சிக்கு கூட வழியின்றி பசி பட்டினியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

மத்திய அரசு செயல்படுத்திவரும் இத்திட்டத்தினை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 300-க்கும் மேற்ப்பட்டோர் பேரளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் விவசாய கூலி தொழிலாளர்கள் ஒரு வேலை கஞ்சிக்கு கூட வழியில்லாமல் தவித்து வருவதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தங்கள் வீடுகளில் இருந்த கஞ்சி கலையங்களை உடைத்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கட்சி எனக்கு... ஆட்சி உனக்கு .... ராமன் லட்சுமணன் ஓபிஎஸ் -ஈபிஎஸ்

Last Updated : Oct 7, 2020, 6:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.