ETV Bharat / state

திருவாரூர்: பயிர் காப்பீடு செய்ய 31ஆம் தேதி கடைசி நாள்!

author img

By

Published : Jul 18, 2020, 5:11 PM IST

திருவாரூர்: பயிர் காப்பீடு செய்ய ஜூலை31ஆம் தேதி கடைசி நாள் என்று மாநில வேளாண் துணை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

farmers
farmers

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே இயந்திர நடவு பணியை மாநில வேளாண் துணை இயக்குனர் தெட்சிணாமூர்த்தி ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய ஜூலை 31ஆம் தேதி கடைசி நாளாகும். அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேளாண்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பிரதமர் மோடியின் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஆறாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம் இதுவரை ஐந்து தவணைகளில் வழங்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்கு தேவையான விதை, உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட அனைத்து வேளாண் பொருள்களும் தயார் நிலையில் உள்ளன.

தனியார் கடைகளில் உரப் பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் மூலம் மட்டுமே உரம் விற்பனை செய்யப்படும் என அரசு தெரிவிக்கவில்லை. விவசாயிகள் எப்போதும் போல தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக உரங்களை வாங்கி கொள்ளலாம். பிரதம மந்திரி கிசான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு லட்சத்து 60ஆயிரம் ரூபாய் வரை விவசாய பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது" எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'ஸ்டாலின் பெயரில் போலி கணக்கு; கறுப்பர் கூட்டத்திற்கு ஆதரவு ட்வீட்' - நீதிமன்றத்திற்குச் செல்லும் திமுக

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.