திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள காளியாகுடி, அன்னதாணபுரம், வாலூர், சேத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 12 ஆண்டுக்கும் மேலாக மேட்டூர் அணை தண்ணீர் வராததால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மேலும், பல வருடங்களாக விளைநிலங்களில் விவசாயம் செய்யாமல் இருப்பதால் கருவேல மரங்கள் வளர்ந்து தரிசு நிலங்களாக மாறிவருகின்றன.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், "மேட்டூர் அணை தண்ணீர் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் பகுதிக்கு வந்து சேரவில்லை. வாய்க்கால்களும், ஆறுகளும் தூர்வாரப்படவில்லை. இதனால் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலையில் தள்ளப்பட்டு உள்ளோம். தற்போது விளைநிலங்கள் தரிசாக மாறியுள்ளன.
குடும்பம் நடத்துவதற்காக நாங்கள் விவசாய வேலைக்கு சுமார் 10 கிலோ மீட்டர் சென்று வருகிறோம். ஆகவே எங்கள் பகுதி வாய்க்கால்கள், ஆறுகளை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் தொடர் மழையால் விவசாயம் பாதிப்பு!