ETV Bharat / state

'பரிசுப்பெட்டி சின்னம்' ஒட்டிய ஆட்டோவில் வந்ததால் கர்ப்பிணி மீது தாக்குதல்! - ADMK-AMMK

திருவாரூர்: வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்க  ஆட்டோவில் வந்த கர்ப்பிணிப் பெண்ணை அதிமுக-வினர் கீழே தள்ளி தாக்கியதால், காயங்களுடன் அப்பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

admk-ammk-fight-injured-pregnant-lady
author img

By

Published : Apr 18, 2019, 3:08 PM IST

தமிழ்நாட்டில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்கள் இன்று நடைபெறுவதையொட்டி வாக்காளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், கட்சி வேட்பாளர்கள் என அனைவரும் வாக்களித்து வருகின்றனர்.

அதிமுக-அமமுகவினர் மோதல்
இந்நிலையில், திருவாரூர் கேக்கரை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நாகை மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த குணசேகர் என்பவர் தனது ஆட்டோவில் உதயசேகரி என்ற கர்ப்பிணி பெண்ணை வாக்களிப்பதற்காக அழைத்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதிமுகவினர் திடீரென ஆட்டோவை மறித்து எப்படி பரிசுபெட்டி சின்னம் ஒட்டிய ஆட்டோவில் வாக்களிக்க அழைத்து வரலாம் என ஓட்டுநர் குணசேகரன் உடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.
வாக்குவாதம் கைகலப்பாக மாறியதையடுத்து அதிமுகவினர் ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து, ஆட்டோவில் இருந்த உதயசேகரி என்ற கர்ப்பிணி பெண்ணையும் கீழே தள்ளிவிட்டு அடித்துள்ளனர். இதனையடுத்து உதயசேகரி திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இது குறித்து திருவாரூர் நகரகாவல் துறையினர் ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:திருவாரூர் அருகே ஆட்டோவில் வாக்களிக்க வந்த கர்ப்பிணிப் பெண்ணை அதிமுக-வினர் கீழே தள்ளி தாக்குதல், காயங்களுடன் கர்ப்பிணிப் பெண் அரசு மருத்துவமணையில் அனுமதி.

Body:திருவாரூர் அருகே ஆட்டோவில் வாக்களிக்க வந்த கர்ப்பிணிப் பெண்ணை அதிமுக-வினர் கீழே தள்ளி தாக்குதல், காயங்களுடன் கர்ப்பிணிப் பெண் அரசு மருத்துவமணையில் அனுமதி.

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்காளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், கட்சி வேட்பாளர்கள் என அனைவரும் வாக்கு செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் கேக்கரை சாலையில் தனியார் பள்ளியில் நாகை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ளது.

அதே பகுதியை சேர்ந்த குணசேகர் என்பவர் தனது ஆட்டோவில் உதயசேகரி என்ற கர்ப்பிணி பெண்ணை வாக்களிப்பதற்காக அழைத்து வந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த அதிமுகவினர் திடீரென ஆட்டோவை மறித்து எப்படி பரிசுபெட்டி சின்னம் ஒட்டிய ஆட்டோவில் வாக்களிக்க அழைத்து வரலாம் என ஓட்டுனர் குணசேகரன் உடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.

வாக்குவாதம் கைகலப்பாக மாறியதையடுத்து அதிமுகவினர் ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து, ஆட்டோவில் இருந்த உதயசேகரி என்ற கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளிவிட்டு அடித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து உதயசேகரி திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து திருவாரூர் நகரகாவல் துறையினர் ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.