திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் பகுதியில் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் அமைந்துள்ளது. அம்மையத்தில் பாரம்பரிய நெல் குறித்து விவசாயிகளுக்கும், விவசாயக் கல்லூரி மாணவர்களுக்கான நெல் அறுவடை திருவிழா நடைபெற்றது. ஆதிரெங்கம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்ற இத்திருவிழாவை ஆராய்ச்சி மைய வேளாண் உதவி இயக்குனர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து மாணவர்கள் விவசாய நிலத்தை வணங்கி அறுவடை பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மாணவர்கள், வேளாண் அலுவலர் வேதநாயகி, மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் இந்த மையத்தில் விவசாய மையத்தில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் நூறு வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி, நாற்று விடுதல், நாற்று பறித்தல், நடவு செய்தல் குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் பஞ்சகவ்யா, மீன் அமிலம், மூலிகைப் பூச்சிவிரட்டி , முட்டை அமிலம் தயாரிப்பது, விதை தேர்வு , கோட்டை கட்டுதல் முறையில் விதை பாதுகாப்பது , மதிப்பு கூட்டி விற்பனை செய்தல் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.25 கோடிக்கு பருத்தி ஏலம்