பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் மார்ச் 2ஆம் தேதி பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம்,வரும் 25ஆம் தேதி ஆயில்ய நட்சத்திரத்தில் நடக்கிறது.
இக்கோயிலுக்கு சொந்தமான ஆழித் தேரானது ஆசியாவிலேயே மிக பிரமாண்ட தேராகக் கருதப்படுகிறது. சுமார் 96 அடி உயரமும், 400 டன் எடையும் கொண்டுள்ளது இதனுடைய தனிச்சிறப்பாகும்.
கடந்த ஆண்டு கரோனா காரணமாக ஆழித்தேரோட்டம் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த ஆண்டு அரசு அனுமதியுடன் நெறிமுறைகளுக்கு உள்பட்டு மார்ச் 25ஆம் தேதி ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்காக தேரை சீரமைத்து அலங்கரிக்கும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:வெட்டுக்கிளிகள் அட்டூழியம்; நெற்பயிர்கள் நாசம்!