திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த சங்கேந்திசம்பா கோட்டகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் விவேகானந்தம் - லிசா(26) தம்பதி. நேற்று இவர்களது வீட்டின் பின்புறம் உள்ள மின் மோட்டாரை லிசாவின் மாமனார் அசோகன் சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அசோகன் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த லிசா மாமனார் கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்து அவரைக் காப்பாற்ற முயற்சி செய்தபோது, அவரையும் மின்சாரம் தாக்கியதில் லிசா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடையூர் காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கிய மாமனாரை காப்பாற்ற முயன்ற இளம்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த மாட்டைத் தொட்ட உரிமையாளருக்கு நேர்ந்த கதி!