திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள சலிப்பே ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த சுகுமார் (61). ரயில்வே துறையின் ஓய்வுபெற்ற ஊழியரான இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மாங்கொட்டை (எ) செந்தில் (50) நேற்று இரவு நடைபயிற்சி சென்ற போது சுகுமாரனை செந்தில் திடீரென்று உருட்டுக்கட்டையால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் செந்திலை தேடி வந்த நிலையில், நன்னிலம் அருகேயுள்ள மாப்பிள்ளைகுப்பம் மாரியம்மன் கோயில் அருகே பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்து அங்கு சென்ற காவல் துறையினர் செந்திலை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டதில், பழைய முன்விரோதம் காரணமாக கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: நன்னிலத்தில் ரயில்வே ஊழியர் அடித்துக் கொலை!