திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அலையாத்திக் காடு கடல் பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னுசாமி தலைமையில், காவல்துறையினர் படகு மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்பகுதியில் அவர்களை கண்டதும் ஒரு படகில் இருந்த மூன்று நபர்கள் தப்ப முயன்றுள்ளனர். இதனையடுத்து அப்படகை காவல்துறையினர் துரத்தி பிடித்து சோதனை செய்தனர். அப்போது படகிலிருந்த ஏழு சாக்கு மூட்டைகளில் 700 கிலோ கஞ்சா கண்டறிப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கஞ்சாவை பறிமுதல் செய்து முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இந்த கடத்தல் சம்பவம் குறித்து காவலர்கள் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணையில், அந்த கஞ்சாவை, அவர்கள் இலங்கைக்கு கடத்த முயன்றதாகவும், மேலும் அதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கக்கூடும் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: பிற மாநிலங்களிலும் தமிழ்க் கல்வியைக் காக்க வேண்டும் - ராமதாஸ்