திருவாரூர்: அகரதிருநல்லூர் காமராஜ் தெருவைச் சேர்ந்தவர் குமரேசன் (35). இந்நிலையில் குமரேசன் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு, இருசக்கர வாகனத்தில் தன்னுடைய உறவினர் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது முன்விரோதம் காரணமாக கிடாரங்கொண்டான் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் அவர் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
![கொலை வழக்கில் சரணடைந்தோர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13673549_surrender1.jpg)
இது குறித்து காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காட்டூரைச் சேர்ந்த சதீஷை (40) கைதுசெய்தனர்.
இந்நிலையில் இந்தக் கொலை வழக்கில் நேற்று முன்தினம் (நவம்பர் 17) கோபாலகிருஷ்ணன் (36), பிரேம்குமார் (32), கலைச்செல்வன் (35), சுரேஷ் (30), வாஞ்சிநாதன் (29) ஆகிய ஐந்து பேர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இதில் கலைச்செல்வன் பாஜகவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விருப்பமின்றி நடந்த திருமணம்: இரண்டே நாளில் தற்கொலை செய்த புதுப்பெண்