திருவாரூர்: 15 வயது மதிக்கத்தக்க சிறுமியும், ஒரு இளைஞரும் வயலில் நின்று பேசியுள்ளனர். இதைக் கண்ட அப்பகுதியினர் அந்த இளைஞரையும், சிறுமியையும் அழைத்து விசாரித்து கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
அங்கிருந்து வீட்டுக்கு சென்ற சிறுமி மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தனக்கு தானே தீ வைத்துள்ளார். தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். உயிரிழப்பதற்கு முன் இது குறித்து சிறுமி கொடுத்த வாக்குமூலத்தில்,”நானும் எனக்கு பிரியமானவரும் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த பிரகாஷ், ஜான், புலிக்குட்டி, முருகன் ஆகியோர் உங்களை பஞ்சாயத்தில் வைத்து நியாயம் பேச வேண்டும் என மிரட்டினர்.
நான் வேண்டாம் எனக் கெஞ்சினேன். நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம்; அவரை விட்டுவிடுங்கள் என சொல்லியும் முடியாது எனக் கூறிவிட்டார்கள். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இந்த முடிவுக்கு வந்துவிட்டேன்”என்றார்.
இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், முருகன் (44), பிரகாஷ் (25), ஜான் (24), புலிக்குட்டி (23) ஆகியோரைக் கைது செய்தனர்.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கு அவலம் - கடனை அடைக்க செயின் பறிப்பில் ஈடுபட்ட எம்பிஏ பட்டதாரி!