தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைரஸ் பரவலௌஜ் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளிலும் மாநில அரசு தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது.
திருவாரூர் மாவட்டத்திலும் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. நேற்று வரை கரோனாவால் 119 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சென்னையிலிருந்து வந்த 12 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 131ஆக உயர்ந்துள்ளது.
இதில், பின்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.