கரோனா வைரஸ் கோரத் தாண்டவத்தால் உயிர் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அமலில் இருந்து வருகிறது.
மேலும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்று மூன்றாவது நாளான நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து, முகமூடி அணியாதவர்கள் அனைவரையும் கடுமையாக எச்சரித்தும், தேவை இல்லாமல் வெளியில் வர வேண்டாம் எனவும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
இதில் மேலும், சிலருக்கு காவல் துறையினரால் தடியடியும் நடத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறியதாக, 101 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 261- வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, 251 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, 144 தடை உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: 'ஊரடங்குல வீட்டுல குளிக்க மாட்டோம் ஆத்துலதான் குளிப்போம்' - இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்த காவல் துறை!