திருவாரூரில் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலில் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதில் பெரும்பாலும் சாலையோரம் இருந்த நிழல்தரும் மரங்கள் ஆகும். இந்நிலையில் வனம் தன்னார்வு அமைப்பினர் கஜா புயலால் முறிந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில், சாலை ஓரங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக கிராமம் முழுவதும் மரக்கன்றுகளை வைத்து, அதை முறையாக பராமரிக்கும் முயற்சியில் ஒரு கிராமத்திற்கு 10 மாணவர்கள் என்ற அடிப்படையில் கிராம வனம் என்ற அமைப்பைத் தொடங்கினர். அதன் முதற்கட்டமாக இன்று விளமல் அரசு உயர்நிலைப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மரக்கன்றுகளை நட்டனர்.
மேலும் ஆண்டுக்கு 100 மரக்கன்றுகள் நடுவது தங்கள் இலக்கு என்றும் அவர்கள் தெரிவித்தனர்.