திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த கோயில்மேடு பகுதியைச் சேர்ந்தவர், ஏசய்யா. இவரது மகன் ஜானி (32). இவர் சோமாசிபாடியிலுள்ள கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடையில் பொங்கல் தொகுப்பு பொருள் வாங்கிவிட்டு, கோயில்மேடு பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திருண்ணாமலையிலிருந்து வந்த லாரி ஒன்று ஜானியின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், ஜானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்பென்னாத்தூர் காவல் துறையினர், ஜானியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த கீழ்பென்னாத்தூர் காவல் துறையினர், தப்பியோடிய லாரி ஓட்டுநரை தீவிரமாகத்தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனம் அடுத்தடுத்து விபத்து!