ETV Bharat / state

நெகிழிக்கு மாற்றாக பாக்கு மட்டைத் தயாரிப்பில் கலக்கும் பெண்மணி! - நெகிழிக்கு மாற்றாக பாக்கு மட்டை தயாரிப்பில் கலக்கும் பெண்மணி

திருவண்ணாமலை: பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, பாக்கு மட்டைத் தொழிலில் சுயமாக ஈடுபட்டு, தட்டுகள் தயாரித்து, வெற்றிகரமாகத் தொழிலை நடத்தி வரும் பெண்மணி பற்றிய செய்தித் தொகுப்பு இதோ...

woman manufactures plastic free plates from betel tree
woman manufactures plastic free plates from betel tree
author img

By

Published : Dec 20, 2019, 8:21 AM IST

திருவண்ணாமலை, வேங்கிக்கால் பகுதியிலுள்ள தொழிற்பேட்டையில் சங்கீதா ஹரி எனும் பெண் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டைகளைக்கொண்டு தட்டுகள் தயாரித்து வருகிறார்.

இந்தத் தொழிலுக்கு வருவதற்கு முன் சங்கீதா பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்கு மட்டைகள் தயாரிப்பது குறித்து சங்கீதா கூறுகையில், "கர்நாடக மாநிலத்திலிருந்து பெரும்பாலும் பாக்கு மட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டு, பின்னர் அவை தரம் பிரிக்கப்படுகின்றன. தரம் பிரிக்கப்பட்டு தண்ணீர் உள்ள தொட்டியில் அரை மணி நேரம் தட்டுகள் ஊற வைக்கப்படுகின்றன. அரைமணி நேரம் ஊற வைக்கப்படுவதால், பாக்கு மட்டையிலிருக்கும் தேவையற்ற பூச்சிகளும் தூசிகளும் வெளியேறும். மேலும் அவை தட்டுகளாக வடிவமைப்பதற்குப் போதுமானவையாக மாறும். அரை மணி நேரம் தண்ணீரை வெளியேற்றுவதற்கு நேராகத் தட்டுகள் நிற்க வைக்கப்படும். பின்னர் இயந்திரங்களில் உருவாகும் சூட்டினைப் பயன்படுத்தி பல்வேறு அளவுகளில் பாக்கு மட்டைத் தட்டுகள் தயார் செய்யப்படுகிறது. பெரிய பாக்கு மட்டையிலிருந்து 12 இன்ச் தட்டுகளும், சிறிய பாக்கு மட்டையிலிருந்து 10, 8, 6 போன்ற சைஸ்களில் பாக்கு மட்டை தட்டுகளும் தயார் செய்யப்படுகின்றன" என்றார்.

நெகிழிக்கு மாற்றாக பாக்கு மட்டை

இவ்வாறு தயாரிக்கப்படும் பாக்கு மட்டைகள் திருமண விழாக்களிலும், ஸ்டார் ஹோட்டல்களில் நடத்தப்படும் விழாக்களிலும் பெரிதும் பயன்படுத்தப்படுவதாக சங்கீதா தெரிவித்தார்.

இந்தப் பாக்கு மட்டைத் தயாரிப்பில் பெண்கள் அதிகமாக ஈடுபடுவதாகத் தெரிவித்த சங்கீதா, அவர்களுக்கு இது மிகச்சிறந்த பலனை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாக்கு மட்டைத் தொழிலில், சுயமாக தட்டுகள் தயாரித்து, வெற்றிகரமாக இத்தொழிலை நடத்தி வருகிறார் சங்கீதா.

இதையும் படிங்க: 9 மாவட்டத்திற்கு மட்டும்தான் பொங்கல் பரிசாம்!

Intro:பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, பாக்கு மட்டைத் தொழிலில் சுயமாக ஈடுபட்டு, பாக்கு மட்டை தட்டுகள் தயாரித்து, வெற்றிகரமாக தொழிலை நடத்தி வரும் பெண்மணி.Body: பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, பாக்கு மட்டைத் தொழிலில் சுயமாக ஈடுபட்டு, பாக்கு மட்டை தட்டுகள் தயாரித்து, வெற்றிகரமாக தொழிலை நடத்தி வரும் பெண்மணி.

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியிலுள்ள தொழிற்பேட்டையில் அண்ணாமலையார் என்டர்பிரைசஸ் மூலம் பாக்கு மட்டைகளை கொண்டு பாக்குமட்டை தட்டுகள் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தயார் செய்யப்பட்டு வருகிறது.

இந்தத் தொழிலுக்கு வருவதற்கு முன் சங்கீதா ஹரி என்ற பெண்மணி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்க்க மாட்டார்கள் தயாரிப்பது குறித்து நம்மிடையே கூறுகையில் ,கர்நாடகா மாநிலத்திலிருந்து பெரும்பாலும் பாக்கு மட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டு பின்னர் அவை தரம் பிரிக்கப்படுகின்றன. தரம் பிரிக்கப்பட்டு தண்ணீர் உள்ள தொட்டியில் அரை மணி நேரம் ஊற வைக்கப்படுகின்றன. அரைமணி நேரம் ஊற வைக்கப்படுவதால் பாக்குமட்டை தேவையற்ற பூச்சிகள் மற்றும் தூசிகள் வெளியேறும். மேலும் அவை தட்டுகளாக வடிவமைப்பதற்கு போதுமானவையாக மாறும். பின்னர் அரை மணி நேரம் தண்ணீரை வெளியேற்றுவதற்கு நேராக நிற்க வைக்கப்படும். நிற்க வைக்கப்பட்ட பாக்கு மட்டைகள் பின்னர் இயந்திரங்களில் உருவாகும் சூட்டினை பயன்படுத்தி பல்வேறு சைஸ்களில் பாக்கு மட்டை தட்டுகள் தயார் செய்யப்படுகிறது. பெரிய பாக்குமட்டையிலிருந்து 12 இன்ச் தட்டுகளும் மேலும் சிறிய பார்க்கமாட்டேன் என்னிலிருந்து 10 8 6 ஆகிய சைஸ்களில் பாக்குமட்டை தட்டுகள் தயார் செய்யப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் பாக்கு மட்டைகள் திருமண விழாக்கள் மற்றும் ஸ்டார் ஹோட்டல்களில் நடத்தப்படும் விழாக்களிலும் பெரிதும் பயன்படுத்தப்படுவதாக பாக்கு மட்டை தயாரிக்கும் பெண்மணி நம்மிடம் தெரிவித்தார்.

பானிபூரி கடைகளில் சிறிய ரக பாக்குமட்டை தட்டுகள் அதிகம் தேவை இருப்பதால் உள்ளூர் கடைகளில் அதிகம் வாங்கிச் செல்வதாகவும் தெரிவிக்கின்றார். இந்த பாக்குமட்டை அதிகம் பெண்கள், ஆண்களை விட அதிகமாக ஈடுபடுவதாகவும் அவர்கள் இது மிகச்சிறந்த ஒரு பலனை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

Conclusion:பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, பாக்கு மட்டைத் தொழிலில் சுயமாக ஈடுபட்டு, பாக்கு மட்டை தட்டுகள் தயாரித்து, வெற்றிகரமாக தொழிலை நடத்தி வரும் பெண்மணி.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.