திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அதிமுக செங்கம் ஒன்றிய மகளிர் அணி துணைச் செயலாளர் ஷகிலா தலைமையில், கழக கொடி ஏற்றுதல் தண்ணீர் பந்தல் அமைத்தல் நிகழ்ச்சி இன்று நடைபெறயிருந்தது. இதில், இந்து அறநிலைத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொள்வார் என்று கூறப்பட்டது.
இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முழு உருவ சிலையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனைத்தொடந்து அப்பகுதிக்கு வந்த செங்கம் காவல் துறையினர், நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் உடனடியாக சிலையை அகற்றி விடவேண்டும் என ஷகிலாவிற்கு உத்தரவிட்டனர்.
சிலையை தன் வீட்டிற்கு எடுத்துச் செல்லவதாக ஷகிலா அலுவலர்களிடம் கூறினார். ஆனால், சிலையை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது எனக் கூறி அதனை அகற்றி செங்கம் பேரூராட்சி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதையும் படிங்க: சி.ஏ.ஏ. எதிர்ப்பு: ஜெயலலிதா சிலையிடம் மனு அளிக்கச் சென்ற பெண்கள்!