ETV Bharat / state

மாத்திரை அட்டை மாடலில் திருமண வரவேற்பு அட்டை... இணையத்தில் வைரல்

author img

By

Published : Aug 19, 2022, 5:39 PM IST

திருவண்ணாமலையில் , திருமண வரவேற்புக்கு மாத்திரை அட்டை மாடலை உபயோகப்படுத்தி உள்ளனர். இது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Thiruvannamalai wedding invite
Thiruvannamalai wedding invite

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த எழிலரசனுக்கும் , விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த வசந்தகுமாரிக்கும் வருகிற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதில் எழிலரசன் மருந்தாளுனராகவும் , வசந்தகுமாரி நர்சாகவும் பணியாற்றி வருகின்றனர்.

சமீப காலமாக சில திருமணங்களில் பாஸ்போர்ட் , ரேஷன் அட்டை போன்றவறை திருமண வரவேற்பு அட்டைகளாக மாற்றி வித்தியாசமான பாணி கடைபிடிக்கப்படுகிறது.இதே போல எழிலரசன் , வசந்தகுமாரி திருமண அழைப்பிதழ் மாத்திரை அட்டை மாடலில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. மாத்திரை குறித்த விவரங்கள் இருக்கும் இடத்தில் எழிலரசன் மற்றும் வசந்தகுமாரியின் படிப்பு விவரம் , தாய் தந்தை மற்றும் முகவரி உள்ளிட்ட குறிப்புகள் உள்ளது.

வழக்கமாக மாத்திரை அட்டைகளில் எச்சரிக்கை என்ற இடத்தில் மருத்துவர் அறிவுரை இன்றி இதனை உட்கொள்ள வேண்டாம் அல்லது வெளிச்சத்தில் வைக்க வேண்டாம் என இருக்கும்... இவர்களோ அதில் கட்டாயம் நண்பர்கள் , உறவினர்கள் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அச்சிட்டுள்ளனர்.

மேலும் மாத்திரை அட்டை எப்போது தயாரிக்கப்பட்டது என்று விளக்கும் இடத்தில் மணநாள் , முகூர்த்த நேரம் குறித்த விவரங்களை இடம் பெறச் செய்துள்ளனர். எங்கே தயாரிக்கப்பட்டது என்ற இடத்தில் திருமணம் நடைபெறும் மண்டபத்தின் முகவரியை குறிப்பிட்டுள்ளனர். இந்த அழைப்பிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: வெளிநாட்டவர்களைக் காதலித்த தங்கள் மகள்களுக்கு தமிழ் கலாசாரத்தில் திருமணம் செய்து வைத்த பெற்றோர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.