ETV Bharat / state

"இயற்கைக்கு புறம்பாக வாழ்ந்து வருகிறோம்" - Tiruvannamalai

திருவண்ணாமலை: நாம் அனைவரும் இயற்கைக்குப் புறம்பாக வாழ்ந்து வருகிறோம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை
author img

By

Published : Aug 18, 2019, 6:28 AM IST

திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளியில் ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜல்சக்தி அபியான் சின்னத்தின் வடிவில் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஜல்சக்தி அபியான் சின்ன வடிவில் ஆயிரக்கணக்கான பள்ளி நின்று மாபெரும் விழிப்புணர்வு
ஜல்சக்தி அபியான் சின்ன வடிவில் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் நின்று மாபெரும் விழிப்புணர்வு

மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நீர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள், நீர் மேலாண்மை பாதுகாப்பு இயக்கம் குறித்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரக்கன்றுகளை நட்டு, நெல்லி, மாம்பழம், மாதுளை, கொய்யா உள்ளிட்ட பல்வேறு விதமான மரக்கன்றுகளை மாணவர்களிடம் வழங்கினார்.

"இயற்கைக்கு புறம்பாக வாழ்ந்து வருகிறோம்"

நீர் மேலாண்மை குறித்து ஆட்சியர் கந்தசாமி பேசுகையில், "இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் இயற்கைக்குப் புறம்பாக வாழ்ந்து வருகின்றோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு, காய்கறி, இறைச்சி ஆகியவற்றை தயாரிப்பதற்கு நீர் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. எனவே, நீரை சேமிக்கவில்லை என்றால் நாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிவரும். இதனை கருத்தில் கொண்டுதான் மத்திய, மாநில அரசுகள் நீரை பாதுகாக்க வேண்டி பல்வேறு பணிகளை செய்துவருகிறது" என்றார்.

Intro:நீரை சேமிக்க வில்லை என்றால் நாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என
திருவண்ணாமலையில் நடைபெற்ற ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி பேச்சு.
Body:நீரை சேமிக்க வில்லை என்றால் நாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என
திருவண்ணாமலையில் நடைபெற்ற ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி பேச்சு.

திருவண்ணாமலை தனியார் பள்ளியில் நடைபெற்ற ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ-மாணவியர்கள் ஜல்சக்தி அபியான் logo வடிவில் மாணவர்கள் நின்று மாபெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நீர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகிய அனைவரும் நீர் மேலாண்மை பாதுகாப்பு இயக்கம் குறித்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரக்கன்றுகளை நட்டார். மேலும் நெல்லி மாம்பழம் மாதுளை கொய்யா பழம் போன்ற பல்வேறு விதமான மரக்கன்றுகளை மாணவர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி பேசியதாவது,
நாம் இல்லாமல் மரம் வளராது, அதேபோல் மரம் இல்லாமல் நம்மால் வாழ முடியாது.

மழைநீரை இன்று நாம் சேமிக்காமல் போனால் மரம் ஏரி குளம் ஆகியவற்றை நம்மால் வருங்காலத்தில் காணமுடியாது.

இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் இயற்கைக்குப் புறம்பாக வாழ்ந்து வருகின்றோம்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் முறை உணவு காய்கறி இறைச்சி ஆகியவற்றை தயாரிப்பதற்கு நீர் இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

எனவே நீரை சேமிக்க வில்லை என்றால் நாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிவரும்.

இதனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் நீரை பாதுகாக்க வேண்டி பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு, ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றன.Conclusion:நீரை சேமிக்க வில்லை என்றால் நாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என
திருவண்ணாமலையில் நடைபெற்ற ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி பேச்சு.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.