ETV Bharat / state

சிசிடிவி கேமராக்களை போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்த வேலூர் சரக டிஐஜி !

திருவண்ணாமலை : கிராம கண்காணிப்பு குழுவின் உதவியுடன் பொருத்தப்பட்ட 120 கண்காணிப்பு கேமராக்களை கட்டுப்பாட்டு அறையுடன் வேலூர் சரக டிஐஜி காமினி நேற்று (ஜன.15) இணைத்துவைத்தார்.

சிசிடிவி கேமராக்களை போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்த வேலூர் சரக டிஐஜி !
சிசிடிவி கேமராக்களை போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்த வேலூர் சரக டிஐஜி !
author img

By

Published : Jan 16, 2021, 6:15 AM IST

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு சிறப்பு காவல்துறை இயக்குநர் ராஜேஷ் தாஸின் வழிகாட்டுதலின் படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 960 கிராமங்களுக்கு தலா ஒரு கிராம விழிப்புணர்வு குழு (village Vigilance Committee-VVC) அமைக்கப்பட்டது. ஒவ்வொரு கிராம விழிப்புணர்வு குழுவுக்கும் பொறுப்பு காவலர் (Village Vigilance Police Officer-VVPO) நியமிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு தாய் கிராமத்திற்கும் கிராம விழிப்புணர்வு குழு காவலர் தலைமையில் ஒரு வாட்ஸ் அப் குழு தொடங்கப்பட்டு, குறிப்பிட்ட கிராமம் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்குழுவில் குறிப்பிட்ட கிராம விழிப்புணர்வு குழு காவலர், கிராம நிர்வாக அலுவலர், அந்த கிராம எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தின் காவல் உதவி ஆய்வாளர், காவல் ஆய்வாளர், அந்த கிராமத்தின் முக்கிய நபர்கள் இணைக்கப்பட்டு தகவல்களை பறிமாறிக்கொண்டு வருகின்றனர்.

அது தவிர, இதர அரசுத்துறைகள் தொடர்பான தகவல்களும் காவல்துறை அலுவலர்கள் மூலம் குறிப்பிட்ட அரசுத் துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

சிசிடிவி கேமராக்களை போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்த வேலூர் சரக டிஐஜி !

மேலும், கிராம விழிப்புணர்வுக் குழு மூலம் விபத்தில்லா திருவண்ணாமலையை உருவாக்கும் நோக்கில் மாவட்டத்திலுள்ள விபத்து நடக்க வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து, தகுந்த முன்னேற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, முதற்கட்டமாக கண்ணமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களில், பொதுமக்களின் முயற்சியால் 120 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.

பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் காமினி கலந்துகொண்டார். புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்த அவர் 120 கண்காணிப்பு கேமராக்களை காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்தார்.

இந்நிகழ்வில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க : கிருஷ்ணகிரியில் யானை மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.