ETV Bharat / state

வேன்-லாரி நேருக்கு நேர் மோதல்: 16 பேர் படுகாயம் - head on collision

வந்தவாசி அருகே தனியார் கம்பெனி வேன், லாரி மோதிய விபத்தில் 16 பேர் படுகாயம் அடைந்தனர், மேல் சிகிச்சைக்காக நான்கு பேர் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேன்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து
வேன்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து
author img

By

Published : Jul 7, 2021, 11:13 AM IST

திருவண்ணாமலை: செங்கல்பட்டு அடுத்த கூடுவாஞ்சேரி அருகே தனியார் துணி கம்பெனியில் வந்தவாசி, அதன் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த 15 பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் நேற்று முன்தினம் (ஜூலை 5) இரவு பணி முடிந்து கம்பெனி வேனில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வேன் வந்தவாசி அடுத்த அய்யாவாடி கிராமம் கூட்டு சாலை அருகே வந்த போது காஞ்சிபுரம் நோக்கி வந்த லாரி நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் லோகநாதன், வேனில் பயணம் செய்த 15 பெண்கள் உள்ளிட்டோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வந்தவாசி காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இவர்களில் கீழ் சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ரேகா, வனிதா, பிரியா மற்றும் வேன் ஓட்டுநர் லோகநாதன் ஆகியோர் மேல் சிகிச்சைகாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஏடிஎம் கார்டுகள் மூலம் பணம் திருட்டு - ஒருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.