திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் வட்டம் வைப்பூர் கிராமத்திலிருந்து கரோனா பரிசோதனைக்காக லயோலா கல்லூரிக்கு சிலர் சென்றுள்ளனர். பரிசோதனை முடிந்த பின்னர் லயோலா கல்லூரியில் தங்குமாறு அவர்களுக்கு கூறப்பட்டுள்ளது.
லயோலா கல்லூரியில் ஒதுக்கப்பட்டுள்ள தங்கும் இடங்களில் உள்ள கழிவறைகள் மிகவும் சுகாதாரமற்ற நிலையில், துர்நாற்றம் வீசி வருகிறது என்றும், அதுமட்டுமின்றி ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே இடத்தில்தான் கழிவறை ஒதுக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும், கரோனா உறுதிசெய்யப்பட்ட ஒருவர் தங்கியிருந்த அறையில், கிருமிநாசினி தெளிக்காமலும், சுத்தப்படுத்தாமலும் அப்படியே வைத்துள்ளனர். இதுபோன்ற மோசமான சூழ்நிலை இங்கு நிலவிவருகிறது. அரசாங்கம் கரோனா பாதிப்பை தடுப்பதற்காக பல கோடிகள் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், லயோலா கல்லூரி தனிமைப்படுத்தும் மையத்தில் எந்தவொரு அடிப்படை வசதியும் சரியாக செய்து கொடுக்கப்படவில்லை என அங்கிருப்பவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: ரூ. 8 லட்சம் வரை வசூலிக்கும் தனியார் மருத்துவமனை - அரசு நிர்ணயித்த கட்டணக் கொள்கை காற்றில் பறந்ததா ?