ETV Bharat / state

உயிருக்கு ஆபத்து: எஸ்.பி. அலுவலகத்தில் காதல் ஜோடிகள் தஞ்சம் - Register marriage

திருவண்ணாமலை: தந்தையால் உயிருக்கு ஆபத்து என இரு வேறு பகுதிகளை சேர்ந்த திருமணமான இரண்டு காதல் ஜோடிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்துள்ளனர்.

two love couples took refuge in the SP office in Tiruvannamalai

author img

By

Published : Aug 28, 2020, 8:19 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் பொற்குணம் கிராமத்தைச் சேர்ந்த முரளி-சினேகா (பட்டதாரிகள்) காதல் ஜோடி கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி கலசப்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் சினேகாவின் தந்தை முருகன் என்பவர், முரளி தனது மகளைக் கடத்திச் சென்றுவிட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதே சமயம் முரளி தன்னை கடத்தவில்லை; தன்னுடைய விருப்பத்தின்பேரில்தான் திருமணம் செய்துகொண்டதாகவும் தன்னுடைய தந்தையால் இருவரின் உயிருக்கும் ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்த சினேகா, அதேபோல் தனது கணவரின் குடும்பத்திற்கும் ஆபத்து உள்ளது என்றும் கூறினார்.

தாங்கள் சேர்ந்து வாழ விரும்புவதாகக் குறிப்பிட்ட சினேகா, ஆதலால் உயிருக்குப் பாதுகாப்புக் கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருமணமான காதல் ஜோடி பவுன்குமார்-விஜி ஆகிய இருவரும் உயிருக்கு பாதுகாப்புக் கேட்டு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

இது குறித்து விஜி கூறுகையில், "கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் காதலித்துவருகிறோம். சமீபத்தில் தனக்கு வேறு ஒரு பையனை திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவுசெய்ததால் இருவரும் திருமணம் செய்துகொண்டோம். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் என்னுடைய பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மேலும் எனது குடும்பத்தினர் பவுன் குமாரின் வீட்டின் மேற்கூரையை அடித்து உடைத்து உள்ளனர். எனது குடும்பத்தினர் எங்களுக்கு கொலை மிரட்டல்விடுக்கின்றனர்.

கடந்த மூன்று நாள்களாக தலைமறைவாக வாழ்ந்துவருகிறோம். உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எங்களுக்கும், எனது கணவரின் குடும்பத்தினருக்கும் உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு வந்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

ஒரேநாளில் இரு வேறு பகுதிகளைச் சேர்ந்த காதல் ஜோடிகள் தந்தையால் உயிருக்கு ஆபத்து எனக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து தஞ்சம் அடைந்த சம்பவம் அப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.