ETV Bharat / state

'தமிழ் மொழி பற்றி தவறான பதிவுக்கு காரணம் அமைச்சர்களின் மெத்தனமே...!'

திருவண்ணாமலை: பன்னிரெண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமிழ் மொழி பற்றி தவறாக பதிவிடப்பட்டிருப்பது எந்த அளவிற்கு அதிமுக அமைச்சர்கள் மெத்தனமாக செயல்படுகிறார்கள் என்பதை காட்டுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

ttv dinakaran
author img

By

Published : Jul 28, 2019, 10:03 AM IST

இது குறித்து அவர் கூறுகையில், "பன்னிரெண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமிழ் மொழி பற்றி தவறாக பதிவிடப்பட்டிருப்பது எந்த அளவிற்கு அதிமுக அமைச்சர்களும், அரசு அலுவலர்களும் மெத்தனமாக செயல்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

புதிய தேசிய கல்விக் கொள்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை அமமுக சார்பில் மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறோம். " என்று தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், "பன்னிரெண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமிழ் மொழி பற்றி தவறாக பதிவிடப்பட்டிருப்பது எந்த அளவிற்கு அதிமுக அமைச்சர்களும், அரசு அலுவலர்களும் மெத்தனமாக செயல்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

புதிய தேசிய கல்விக் கொள்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை அமமுக சார்பில் மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறோம். " என்று தெரிவித்தார்.

Intro:திருவண்ணாமலை வேங்கிக்கால் தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது.


Body:திருவண்ணாமலை வேங்கிக்கால் தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்த டிடிவி தினகரன் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பினை மாவட்ட கழக செயலாளர்கள் அளித்தனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை வகித்து பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியதாவது,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை விட்டு செல்பவர்கள் எல்லாம் சுயலாபத்திற்காக செல்கிறார்கள்.

இங்கிருந்து அதிமுகவுக்கு செல்பவர்களுக்கு எந்தவிதமான பயனும் இருக்கப் போவதில்லை ஏனென்றால் அங்கே இருப்பவர்களுக்கு எந்த வித பலனும் கிடைக்கவில்லை என்கின்ற ஆதங்கமே உள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனுப்பியிருக்கிறோம். எங்களுடைய ஆலோசனைகளை ஏற்று திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சிலை கடத்தல் விவகாரத்தில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என்று பொன்மாணிக்கவேல் கூறியிருப்பது யார் என்று எனக்கு தெரியாது. ஆறாம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

கர்நாடகாவில் நடப்பது ஜனநாயகப் படுகொலை. நாங்கள் ஒன்றாக சென்றால் ஜனநாயகக் கடமையை ஆற்றுங்கள் என்று கூறுகிறார்கள். இப்போது கர்நாடகாவில் ஜனநாயகப் படுகொலை நடந்துள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமிழ் மொழி பற்றி தவறாக பதிவிடப்பட்டுள்ளது இந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் எந்த அளவிற்கு மெத்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்பதை காட்டுகிறது என்று கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட அனைத்து பகுதி ஒன்றிய நகர பேரூராட்சி கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.




Conclusion:திருவண்ணாமலை வேங்கிக்கால் தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.