ETV Bharat / state

ஜவ்வாது மலையில் களைக்கட்டியது கோடை விழா..! - களைக்கட்டியது

திருவண்ணாமலை: ஜவ்வாது மலையில் தொடங்கிய 22ஆவது கோடை விழாவை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

ஜவ்வாது மலையில் களைக்கட்டியது கோடை விழா
author img

By

Published : Jun 15, 2019, 10:51 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் ஆண்டுதோறும் இரண்டு நாட்கள் கோடை விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் உள்ளூர் பகுதியில் விளைந்த காய்கறிகள், உணவு பண்டங்கள், கலை நிகழச்சிகள் ஆகியவை இடம்பெறும். இதை காண சுற்றுவட்டார பகுதி மட்டுமல்லாமல் பல வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பார்த்து செல்வர்.

அதன்படி இந்தாண்டிற்கான 22ஆவது கோடை விழா இன்று தொடங்கியது. விழாவை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், சேவூர் ராமசந்திரன், எம்.சி சம்பத் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மேலும், விளையாட்டுத் துறை, தோட்டக்கலைத் துறை சார்பில் விளையாட்டு போட்டிகள், காய்கறிகள் கண்காட்சியும் நடத்தப்பட்டது. இதனால் விழா களைக்கட்டியது. இன்றும், நாளையும் விழா நடைபெறுவதால், மக்கள் வந்து பங்கேற்க வசதியாக போக்குவரத்துத் துறை சார்பில் பல்வேறு வழித்தடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Intro:திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் இன்றும் நாளையும் கோடை விழா நடைபெறுகிறது மூன்று அமைச்சர்கள் பங்கேற்பு.
Body:திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் இன்றும் நாளையும் கோடை விழா நடைபெறுகிறது மூன்று அமைச்சர்கள் பங்கேற்பு.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் திறந்தவெளி மைதானத்தில் இருபத்தி இரண்டாவது கோடை விழா இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது இதனை முன்னிட்டு இன்று தொழில் துறை அமைச்சர் எம் சி சம்பத் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கோடை விழாவினை துவக்கி வைத்து அரசுத் துறைகளின் கண்காட்சி அரங்குகளை திறந்துவைத்து அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடைபெறும் இந்தக் கோடை விழாவில் மலைவாழ் மக்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் என பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மலைவாழ் மக்களின் பாரம்பரியம் மற்றும் சிறப்புகளை விளக்கும் வகையில் பாரம்பரிய நடனங்கள் பாடல்கள் விளையாட்டுகள் உணவு வகைகளை உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் பழங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் அடங்கிய உள்ளூர் சந்தை ஆகியவை இடம் பெறுகிறது.

ஜமுனாமரத்தூரில் இந்த வருடம் முதல் முறையாக உயரப் பறக்கும் ஹாட் ஏர் பலூன் மற்றும் ஏரியை சுற்றி வருவதற்கு குதிரை சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் வாட்டர் பால் ரிவர் கிராஸின் ஆகிய சாகச நிகழ்ச்சிகளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சுற்றுலாத்துறை சார்பாக ஜமுனாமரத்தூர் ஏரியில் மிதிவண்டி படகு போட்டி வாத்து பிடிக்கும் போட்டி ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது நாளை நாய் கண்காட்சி நடைபெற உள்ளது இரவு 6 மணி முதல் 8 மணிவரை லேசர் காட்சி மற்றும் மேஜிக் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது மேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பாக பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் கொழு கொழு குழந்தைகள் போட்டி சமூகநலத் துறை சார்பாக பெண்களுக்கான கோலப்போட்டியில் விளையாட்டுத் துறை சார்பாக மலைவாழ் மக்கள் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது தோட்டக்கலைத் துறை சார்பாக கண்கவர் மலர்கள் மற்றும் காய்கறிகள் கண்காட்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த இரண்டு நாட்கள் நடைபெறும் கோடை விழாவினை காண ஜவ்வாது மலையில் அமைந்துள்ள கிராமங்களில் உள்ள மக்கள் வந்து கண்டு களிக்கும் வகையிலும் வேலூர் திருவண்ணாமலை திருப்பத்தூர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்கள் வந்து பங்கேற்று செல்லும் வகையிலும் சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

Conclusion:திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் இன்றும் நாளையும் கோடை விழா நடைபெறுகிறது மூன்று அமைச்சர்கள் பங்கேற்பு.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.