ETV Bharat / state

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மண்டபத்தில் அடைப்பு! - 8 வழிச்சாலை

திருவண்ணாமலை: ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன் உயர்மின் கோபுரம், எட்டு வழிச்சாலை திட்டங்களை கைவிடக்கோரி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துவைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தின் முன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
author img

By

Published : Jul 19, 2019, 11:49 AM IST

Updated : Jul 19, 2019, 12:47 PM IST

விவசாய நிலங்களில் அமைக்கப்படும் உயர்மின் கோபுரம், 8 வழிச்சாலை திட்டங்களை கைவிடக்கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் டி. ரவீந்திரன் தலைமை தாங்கினார். மேலும் இதில் மாவட்ட செயலாளர் வி. சுப்பிரமணி, தலைவர் டி.கே. வெங்கடேசன், நிர்வாகிகள் உதயகுமார், கே.கே. வெங்கடேசன், அழகேசன், ஏ.வி. ஸ்டாலின் மணி, ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எஸ். அபிராமன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தின்போது...

  • விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல், வருவாய்த் துறை, காவல் துறை மூலம் சாகுபடிகளை நாசப்படுத்தி மின் கோபுரம் அமைக்கும் பணிகளை உடனடியாக கைவிட வேண்டும்.
  • மின்கோபுரம் அமைத்து செயல்படும் திட்டங்களுக்கு, மின் கோபுரங்களுக்கும் கம்பி செல்லும் பாதைக்கும் உண்டான வருட வாடகையும், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்.
  • மின்திட்டங்களை விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்வதை தவிர்த்து, சாலையோரம் கேபிள் மூலமாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் வகையில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் (1885ஆம் ஆண்டு) ஏற்படுத்தப்பட்ட தந்தி சட்டத்தை கைவிட்டு, விவசாயிகளுக்கு பாதுகாப்பான புதிய சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பின்படி, நில ஆர்ஜித நடவடிக்கைகளைக் கைவிட்டு, நிலத்தை விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் உரையாற்றினர். இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு கூட்டியக்கம், உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

பின்னர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துவைத்தனர்.

Intro:திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தின் முன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
Body:திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தின் முன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

உயர்மின் கோபுரம், 8 வழி சாலை திட்டங்களை கைவிட கோரி, திருவண்ணாமலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், உயர் மின் அழுத்த கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், 8 வழி சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இணைந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை தலைவர் டி. ரவீந்திரன் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் வி. சுப்பிரமணி, தலைவர் டி.கே. வெங்கடேசன், நிர்வாகிகள் உதயகுமார், கே.கே.வெங்கடேசன், அழகேசன், ஏ.வி.ஸ்டாலின்மணி, ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எஸ். அபிராமன் உள்ளிட்ட பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையை வைத்து பயமுறுத்தியும், சாகுபடிகளை நாசப்படுத்தியும், மின் கோபுரம் அமைக்கும் பணிகளை உடனடியாக கைவிட வேண்டும், மின்கோபுரம் அமைத்து செயல்படும் திட்டங்களுக்கு, மின் கோபுரங்களுக்கும், கம்பி செல்லும் பாதைக்கும், வருட வாடகையும், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்.

மின் திட்டங்களை விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்வதை தவிர்த்து, சாலையோரம் கேபிள் மூலமாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்,

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் வகையில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் (1885 ஆம் ஆண்டு) ஏற்படுத்தப்பட்ட தந்தி சட்டத்தை கைவிட்டு, விவசாயிகளுக்கு பாதுகாப்பான புதிய சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பின் படி, நில ஆர்ஜித நடவடிக்கைகளைக் கைவிட்டு, நிலத்தை விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தில் நிர்வாகிகள் உரையாற்றினர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், 8 வழி சாலை எதிர்ப்பு கூட்டியக்கம் மற்றும் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் இதில் பங்கேற்றனர்.

பின்னர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். Conclusion:திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தின் முன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

Last Updated : Jul 19, 2019, 12:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.