திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களில் திருக்கார்த்திகைத் தீபத்திருவிழா முக்கியமானதாகும். இந்த ஆண்டிற்கானத் தீபத்திருவிழா அண்ணாமலையார் திருக்கோயிலில் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறவுள்ளது.
டிசம்பர் 10ஆம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு கோயிலில் பரணி தீபமும், அதனைத்தொடர்ந்து அன்று மாலை ஆறு மணிக்கு மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படவுள்ளது. இவ்விழாவின் போது அண்ணாமலையார் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் காலை மற்றும் இரவு ஆகிய இருவேளைகளிலும் வாகனங்களில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாளிப்பார்.
அவ்வாறு அண்ணாமலையார் உலாவரும் வாகனங்களான இந்திர விமானம், குதிரை வாகனம், சிம்ம வாகனம், காமதேனு, கற்பக விருட்சம், புருஷாமிருகம், கைலாச வாகனம், நாக வாகனம், ஆச்சி விமானம், மயில் வாகனம், பூத வாகனம், சூரியப் பிறை, சந்திரப்பிறை, ரிஷப வாகனம், கஜ வாகனம், மேரு வாகனம், வெட்டு குதிரை வாகனம், மூஷிக வாகனம், புலி வாகனம், ஆட்டுக்கிடா வாகனம், கண்ணாடி விமானம், அதிகார நந்தி போன்ற வாகனங்களுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெறும் ஏழாம் நாள் தேர்த்திருவிழாவின் போது தேரில் வைக்கப்படும் குதிரை சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: 'மதுக் கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் பெருகும்' - அமைச்சர் ஜெயக்குமார்!