திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நிறைவடைந்தது. இருப்பினும் அண்ணாமலையார் திருக்கோயில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு, குடைகளை பிடித்துக்கொண்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து, சாமி தரிசனம் செய்தனர்.
ஒளியால் பிரகாசம் அடைந்த தமிழ்நாடு... கார்த்திகை தீபத்திருநாள் கோலாகல கொண்டாட்டம்!
விடுமுறை தினம் என்பதால் அனைவரும் ஒரே நேரத்தில் சாமி தரிசனம் செய்ய வருவதால், இந்தக் கூட்டம் என்று கூறப்படுகிறது. இதனால் திருவண்ணாமலை நகரத்தை சுற்றிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.