திருவண்ணாமலை அடுத்த கணத்தம்பூண்டி ஊராட்சியில் பழங்குடியினர் 15 பேருக்கும் நரிக்குறவர்கள் 51 பேருக்கும் என மொத்தம் 66 வீடுகள் ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
வீட்டின் கட்டுமான பணிகள் (1) கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார். நரிக்குறவர் இன மக்களுக்காக வீடுகளை ஒதுக்கி கட்டுமான பணிகளை ஆய்வுசெய்ய வருகைதந்த மாவட்ட ஆட்சியரை வரவேற்கும்விதமாக நரிக்குறவர்கள் பாசிமணி மாலையை அணிவித்து வரவேற்பு அளித்தனர். வீட்டின் கட்டுமான பணிகள் (2) வீட்டின் கட்டுமான பணிகள் (3) புதிதாக 66 வீடுகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சாலை வசதி, மின்சார வசதி செய்து தருவது குறித்து ஆய்வுசெய்து ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கி, நிலுவையில் உள்ள பணிகளை ஒரு வார காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, வட்டாட்சியர் அமுலு ஆகியோர் உடனிருந்தனர்.வீட்டின் கட்டுமான பணிகள் (4) வீட்டின் கட்டுமான பணிகள் ஆய்வு!
இதையும் படிங்க: ஓடிடி தமிழ்நாடு மட்டுமல்ல உலகளாவிய பிரச்னை - கடம்பூர் ராஜூ