திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நரசிங்கநல்லூர் பகுதியில் சுமார் நூறு ஏக்கர் பரப்பிலான ஏரியை நம்பி விவசாயிகள் உள்ளனர். குடிநீர் கிணறுகள், விவசாய கிணறுகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயரவும் இந்த ஏரி ஆதாரமாக இருந்துவருகிறது.
தொரப்பாடி பகுதியைச் சேர்ந்த ரவி என்ற தனிநபர் ஒருவர் அனுமதியின்றி ஏரி கரையை உடைத்து, பைப் மூலம் தனது நிலத்திற்கு நீர் எடுத்து பயன்படுத்துவதாகவும், இதனால் நீர்பிடிப்பின் போது கரை உடைந்து ஏரியே உடைந்து விடும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆடு, மாடுகளுக்கு நீர் இல்லாமல் போகும் நிலை மட்டுமில்லாமல், நிலத்தடி நீர் உயராமல் போகும் வாய்ப்பிருப்பதால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.