திருவண்ணாமலை மாவட்டத்தில், சென்னையிலிருந்து வந்த 13 பேர், நோயாளியுடன் தொடர்பிலிருந்த ஆறு பேர், புறநோயாளிகள் பிரிவிலிருந்த ஆறு பேர் உள்ளிட்ட 27 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது இவர்கள் 27 பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 843ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்து 463 பேர் வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
![tiruvannamalai corona UPdate](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/02:23_tn-tvm-02-corona-rises-script-7203277_18062020141651_1806f_1592470011_879.png)
நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சூரிய கிரகணத்தால் கரோனா வைரஸ் தாக்குதலில் மாற்றம்?