திருவண்ணாமலை மாவட்டத்தில் 'ஜல்சக்தி அபியான்' நீர் மேலாண்மை இயக்கத்தின் மூலம் நீரினைப் பாதுகாத்தல், நீர் சேமித்தல் குறித்து பல்வேறு திட்டங்கள், விழிப்புணர்வை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது.
பள்ளிக் கல்வித் துறையின் ஒத்துழைப்புடன் செய்யப்பட்ட விதைப் பந்துகளை விதைக்கும் பணி மழைக் காலங்கள் தொடங்கியதை அடுத்து மாவட்டம் முழுவதும் மரங்கள் குறைவாக இருக்கும் வனப்பகுதிகளில் காடுகளை உருவாக்கும் நோக்கத்தில் செயல்படுத்தப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக நேற்று திருவண்ணாமலை கிரிவலப் பாதை மலைப்பகுதிகளில் ஒரு லட்சம் விதைப்பந்துகளை விதைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கிவைத்தார்.