திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஆக.11) புதிதாக 120 பேருக்கு நோய்த் தொற்று உறுதியானதால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 108 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா நோய்த் தொற்றிலிருந்து 43 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 90ஆக உள்ளது. சிகிச்சை பலனின்றி நேற்று ஆறு பேர் உயிரிழந்ததால் மாவட்டத்தின் கரோனா உயிரிழப்பு 100ஆக அதிகரித்துள்ளது.
சென்னையிலிருந்து வந்த ஏழு பேர், காஞ்சிபுரம், ஜம்மு-காஷ்மீரிலிருந்து வந்த தலா ஒருவர், புறநோயாளிகள் பிரிவில் இருந்து 36 பேர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த 41 பேர், இரண்டாம் நிலை நோய்த் தொற்று பெற்ற 13 பேர், மற்ற மாவட்டங்களில் இருந்து வந்த 21 பேர் உள்ளிட்ட 120 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


