திருவண்ணாமலை வேங்கிக்கால் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் நேற்று முன்தினம் திருவண்ணாமலை நகரில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று வீட்டு செலவுக்காக தனது கணக்கில் இருந்து மூன்று லட்சம் எடுத்துள்ளார்.
அதனை தனது பைக் பெட்டியில் வைத்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது, பெரியார் சிலை அருகே பைக்கை நிறுத்திவிட்டு அங்குள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்றுள்ளார். பின்னர், சில நிமிடங்களில் பைக்கின் அருகே வந்த அவர் பைக் பெட்டி திறக்கப்பட்டு அதிலிருந்த மூன்று லட்சம் ரூபாய் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே அவர் திருவண்ணாமலை (கிழக்கு) காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், ரமேஷ் பைக்கை நிறுத்தி விட்டு கடைக்குள் செல்வதும், அதே நேரத்தில் அவரது பைக்கின் பின்னால் மற்றொரு பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் பைக் பெட்டி உடைத்து, அதிலிருந்த பணத்தை திருடிச்சென்றதும் பதிவாகியிருந்தது. இதையடுத்து பணத்தை திருடிச்சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ”தனியாருக்கு லாபம் கிடைத்தால் அரசின் வரி வருவாயும் அதிகரிக்கும்” - முன்னாள் இந்திய வருவாய் துறை அலுவலர் சரவணக்குமார்