திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சிவலிங்கம் மீது சூரிய ஒலிபடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அருணாசலேசுவரர் கோயிலின் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள திருநேர் அண்ணாமலையார் கோயிலில் இன்று காலை கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மலர் அலங்காரம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருநேர் அண்ணாமலையாரையும், சூரியனை வழிபட்டனர். 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களும் மூடப்பட்டுள்ளன. ஆனால், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அண்ணாமலையார் ஆலயத்தில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பக்தர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்று கூடி சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பத்தாயிரம் ரூபாய் செலவில் வென்ட்டிலேட்டர்: அரசுக்கு கோரிக்கை வைக்கும் இளைஞர்கள்