திருவண்ணாமலை நகரில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் தெருவில் இதுவரை 30 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், காமாட்சி அம்மன் கோயில் தெருவை தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதனால், அங்கு உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ள அந்த பகுதியில், விதிமுறையை மீறி காய்கறி கடை, மளிகைக் கடை, மொத்த விற்பனை அங்காடி, ஏஜென்சி என நான்கு கடைகள் திறந்து செயல்பட்டு வந்தன. இது குறித்து திருவண்ணாமலை நகராட்சிக்கு தகவல் கிடைத்தது.
![கடைகளுக்கு சீல் வைத்த நகராட்சி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01:24:08:1594367648_tn-tvm-02-containment-sealed-vis-7203277_10072020124240_1007f_1594365160_508.png)
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அலுவலர்கள், விதிமுறைகளை மீறி விற்பனை செய்து வந்த நான்கு கடைகளுக்கும் காவல்துறையின் உதவியுடன் சீல் வைத்தனர்.