திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு சில தினங்களாக கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 600 என்று இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று (மே.16) சற்று நிம்மதி தரும் வகையில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 435ஆக குறைந்தது. மேலும் இறப்பு விகிதம் கடந்த ஒரு வாரமாக, தினந்தோறும் சராசரியாக மூன்றுக்கு மேல் இருந்து வந்த நிலையில், நேற்றும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையானது 4 ஆயிரத்து 707 ஆக உள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 348 ஆகும்.
தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ள மாவட்டத்திற்கான மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லஷ்மி பிரியா ஐஏஎஸ் இன்று (மே.17) திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா முன் ஏற்பாடுகள், கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள், ஆக்ஸிஜன் கையிருப்பு ஆகியவை குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அவருடன் ஆட்சியர் சந்தீப் நந்தூரி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர், மருத்துவர்கள், அரசு அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட போது, மாவட்டத்தில் கரோனா தொற்று பற்றிய விவரங்களை கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் கரோனா நிதி வழங்கினார்