தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை சூடுபிடித்து வருகிறது. இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்காக புகார் எண்ணை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மற்றும் ஆரணி ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக ஏற்கனவே 24 படை குழுக்கள், 24 நிலை கண்காணிப்பு குழுக்களும் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். தற்போதுஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கு 6 குழுக்கள் வீதம்கூடுதலாக 48 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.