திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அனைத்துப் பகுதிகளிலும் இரவு நேரங்களில் மட்டும் பரவலாக மழை பெய்துவந்தது. இந்நிலையில், இன்று பகல் நேரத்தில் இடியுடன் கூடிய பெய்த கனமழையால் மக்களை மகிழ்ச்சி அடைந்தனர்.
இம்மாவட்டத்தில் பல மாதங்களாக மழையின்றி விவசாயம் வறட்சியை சந்தித்து வந்தநிலையில், தற்போது பெய்த மழையால் விவசாயிகள் பயிரிட்டுள்ள மானாவாரி மணிலா பயிர்களின் அறுவடை சிறப்பான முறையில் இருக்கும். மேலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவந்த சூழலில் இந்த மழையினால், குடிநீர்த் தேவையை சமாளிக்கலாம்.