ETV Bharat / state

குறைதீர்க்கும் கூட்டத்தில் குவிந்த மனுக்கள் - விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குவிந்த மனுக்கள் குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

குறைதீர்க்கும் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
குறைதீர்க்கும் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
author img

By

Published : Jan 28, 2020, 10:37 AM IST

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்தும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பெற்றுக்கொண்டார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கல்வி உதவித் தொகை, வங்கிக் கடன் உதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை , உபகரணங்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 506 மனுக்கள் பெறப்பட்டன.

மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட மனுக்கள்
மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட மனுக்கள்

பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் வழங்கி, உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி உத்தரவிட்டார். மேலும், நிலுவையிலுள்ள மனுக்களின் மீது தொடர் நடவடிக்கைகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர்
குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர்

சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 16 மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையாக மாதம் தலா ஆயிரம் ரூபாயும் இரண்டு நபர்களுக்கு முதியோர் உதவித்தொகையாக மாதம் தலா ஆயிரம் ரூபாயும் பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இதையும் படிங்க: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்

Intro:மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 506 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றார்.
Body:மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 506 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் பொதுமக்களிடம் இருந்தும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பெற்றுக் கொண்டார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கல்வி உதவித் தொகை, வங்கிக் கடன் உதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 506 மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் வழங்கி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

மேலும் நிலுவையில் உள்ள மனுக்களின் மீது தொடர் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 16 நபர்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி தொகையாக மாதம் தலா ரூ.1000, இரண்டு நபர்களுக்கு முதியோர் உதவித் தொகையாக மாதம் தலா
ரூ.1000, இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு மாதம் உதவித் தொகையாக ரூ.1000, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு மாதம் உதவித் தொகையாக ரூபாய் 1000 பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

Conclusion:மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 506 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.