திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4269 ஆக உள்ளது. சிகிச்சைப் பலனின்றி 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இருந்து வந்த ஆறு பேர், ஈரோடு, காஞ்சிபுரத்திலிருந்து வந்த தலா ஏழு பேர், திருப்பூரிலிருந்து வந்த மூன்று பேர், விழுப்புரம், வேலூர், பெங்களூரிலிருந்து வந்த தலா இரண்டு பேர், ஆந்திரா, செங்கல்பட்டு, ஜம்மு காஷ்மீர், கிருஷ்ணகிரி, மும்பை, நாமக்கல், சீர்காழியிலிருந்து வந்த தலா ஒருவர், புறநோயாளிகள் பிரிவில் இருந்து 108 பேர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த 65 பேர், இரண்டாம் நிலை நோய்த்தொற்று பெற்ற 24 பேர், முன் களப்பணியாளர்கள் ஒன்பது பேர், மற்ற மாவட்டங்களில் இருந்து அனுப்பப்பட்ட 12 பேர் உள்ளிட்ட 254 பேருக்கு இன்று மட்டும் கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிழக்கு ஆரணி, நாவல்பாக்கம், ஜமுனாமரத்தூர், கலசப்பாக்கம், ஆக்கூர், வந்தவாசி, பெருங்கட்டூர், போளூர், காட்டாம்பூண்டி, தச்சூர், செங்கம், சேத்பட், துரிஞ்சாபுரம், திருவண்ணாமலை நகராட்சி உள்ளிட்ட சுகாதார வட்டத்தைச் சேர்ந்த 254 பேருக்கு இன்று நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து புறநோயாளிகள் பிரிவில் கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக நோயாளிகளிடம் தொடர்பில் இருந்தவர்களிடம் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு, அது மற்றவர்களுக்கு இரண்டாம் கட்ட பாதிப்பாக தொடர்ந்து வருகிறது.
இதையும் படிங்க: உலகின் முதல் கோவிட்-19 தடுப்பூசி; ஆகஸ்ட் 12இல் களமிறக்கும் ரஷ்யா!
தி.மலையில் இரட்டை சதம் அடித்த கரோனா.. தொற்று பாதிப்பு 7312 ஆக உயர்வு!
திருவண்ணாமலை: இன்று ஒரே நாளில் மட்டும் 254 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கரோனா எண்ணிக்கை 7312 ஆக உயர்ந்துள்ளது.