ETV Bharat / state

வேல பாப்பீங்களா சஸ்பெண்ட் செய்யவா? எச்சரித்த தி.மலை ஆட்சியர்... வரவேற்ற பொதுமக்கள்...! - பிரதமர் வீடு கட்டும் திட்டம்

திருவண்ணாமலை: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு பயனாளிகளுக்கு வீடு வழங்காமலிருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை ஆட்சியர் கந்தசாமி கடுமையாக எச்சரிக்கும் ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகிவருகிறது.

collector kandasamy
author img

By

Published : Oct 19, 2019, 7:19 PM IST

Updated : Oct 19, 2019, 7:44 PM IST

ஊரக வளர்ச்சி அலுவலர்கள் அடங்கிய வாட்ஸ்அப் குழுவில், 'அனைவருக்கும் வணக்கம் நான் கலெக்டர் பேசுறேன்' என்று தொடங்கும் அந்த ஆடியோவில், "ஏற்கனவே நடந்த கூட்டத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டம் மற்றும் மற்ற திட்டங்கள் மிகவும் தொய்வாக இருக்கின்றன. இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தினோம். அரசு மேல்மட்ட அலுவலர்களும் இது குறித்து கேள்வி கேட்கிறார்கள். அதற்கு நாங்கள் பதில் சொல்லிக் கொண்டிருந்தோம். கடந்தமுறை இது சம்பந்தமாக கண்டிப்பான முடிவுகளை எடுத்திருந்தோம்.

அலுவலர்களை எச்சரித்த ஆட்சியர்

ஏன் வீடுகள் கட்டும் திட்டம் மக்களிடம் சென்றடையவில்லை? உள்ளிட்டவைக் குறித்து நிறைய புகார்கள் நமக்கு வந்துகொண்டிருக்கின்றன. எனவே இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அது சம்பந்தமான குறைகள்தான் அதிகமாக இருந்தன.

மக்களின் கோரிக்கைகளை ஏற்று வீடுகளை ஒதுக்குவதற்கு திங்கள் கிழமைதான் கடைசி நாள். நான் இந்த மாவட்டத்தில் இருக்கிறேனா? அல்லது நீங்கள் பணியில் இருக்கிறீர்களா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். இது எனது கோபத்தின் உச்சக்கட்டம்.

திங்கள்கிழமை எங்கேயாச்சும் ஒரு பஞ்சாயத்து செயலாளரோ? அது சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரோ அல்லது துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யாராக இருந்தாலும் சரி, திங்கள்கிழமைக்குள்ள அனைவருக்கும் வீடு வழங்கவில்லையென்றால் எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்ய தயாராக இருக்கிறேன். இதனை நீங்கள் எப்படி கையாள்கிறீர்களோ, எப்படி எடுத்துக்கொள்கிறீர்களோ என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை.

இதனைப் பற்றி நாம் திங்கள்கிழமை விவாதிப்போம். பொறுத்து பொறுத்து பொறுமையை இழந்துவிட்டேன். தவறு நடப்பதை பார்ப்பதற்காக இங்கு அமரவில்லை. நீங்கள் செய்யும் தவறுகளை காவல் காப்பவன் நான் இல்லை. தவறுகளை சரி செய்வது என் கடமை இது.

அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பஞ்சாயத்து செயலாளர்கள் இதை கவனமாக எடுத்துக் கொள்ளவும், திங்கள்கிழமை அன்று நீங்கள் காலையில் வேலைக்கு வந்து வீட்டுக்கு வேலையோட போறீங்களா, இல்ல வேலையில்லாமல் போறீங்களா என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள். நான் இந்தச் சவாலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்" என ஆட்சியர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆட்சியரின் இந்தப் பேச்சு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பலர் இவரை 'மக்கள் ஆட்சியர்' எனப் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

Intro:திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி பயனாளிகளுக்கு வீடு வழங்குவது தாமதமாவது தொடர்பாக, அதிகாரிகளை எச்சரிக்கும் ஆடியோ. Body:திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி பயனாளிகளுக்கு வீடு வழங்குவது தாமதமாவது தொடர்பாக, ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் ஊரக வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகளை எச்சரிக்கும் விதத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அனைவருக்கும் வணக்கம் நான் கலெக்டர் பேசுறேன் என்று தொடங்கும் அந்த ஆடியோவில் ,

ஏற்கனவே கடந்த மீட்டிங்ல பிஎம்ஐ வீடுகள் மற்றும் மற்ற திட்டங்கள் மிகவும் தொய்வாக இருக்கிறது சம்பந்தமாக ஆலோசனை நடத்தி இருக்கிறோம், அரசாங்கத்தின் மூலமும் கேள்வி கேட்கிறார்கள் அதற்கு நாங்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
கடந்த முறை இது சம்பந்தமாக கண்டிப்பான முடிவுகளை எடுத்து இருந்தோம். நம்மிடம் இருக்கும் விவரங்கள் மற்றும் வீடு பயனாளிகள் ஆகியோருக்கு ஏன் இன்னும் வீடுகள் சென்று சேரவில்லை,
ஏன் வீடுகள் போக மாட்டேங்குது அப்படின்னு நிறைய புகார்கள் நமக்கு வந்துட்டு இருக்கு.
இன்னைக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அது சம்பந்தமான குறைகளா இருக்கு.
திங்கள் கிழமை உங்களுக்கு உச்சகட்டம், ஒன்னு நான் இந்த மாவட்டத்தில் இருக்கனா, இல்ல நீங்க பணியில் இருக்கீங்களா என்பதை நீங்க தான் முடிவு பண்ணிக்கனும்.
திங்கள் கிழமை எனக்கு எங்கேயாச்சும் ஒரு பஞ்சாயத்து செயலாளரோ இல்லை அது சம்பந்தப்பட்ட BDO அல்லது Deputy BDO
யாரா இருந்தாலும் சரி வீடு திங்கட்கிழமை குள்ள எல்லாருக்கும் அல்லட்மெண்ட் ஆகல அப்படின்னா அன்னைக்கு எத்தனை பேரையும் நான் சஸ்பெண்ட் பண்றதுக்கு நான் தயாராய் இருக்கிறேன்.
இதை நீங்க எடுத்துக்கங்க, இதை நீங்க எப்படி கையாள்கிறீர்களோ, எப்படி எடுத்துக்கொள்கிறீர்களோ எடுத்துக்கங்க.
இது பத்தி நாம திங்கட்கிழமை பார்த்துக்கலாம், நான் இது சம்பந்தமா சீரியஸா இருக்கேன்.
என்னுடைய பொறுமையை இழந்துவிட்டேன், நீங்கள் எல்லாம் பண்ற தப்ப பார்த்துட்டு இருக்கறதுக்கு நான் வரல, தப்பு செய்றத காவல் காப்பவன் நான் இல்லை, தப்ப சரி பண்றதுக்காக வேண்டி, இது கடைசி என்னுடைய உச்சகட்ட கோபம்.
அனைத்து BDO மற்றும் பஞ்சாயத்து செயலாளர்கள் இதை கவனமாக எடுத்துக் கொள்ளவும், திங்கட்கிழமை நீங்க காலையில வேலைக்கு வந்து வீட்டுக்கு வேலையோட போறீங்களா, இல்ல வேலையில்லாமல் போறீங்களா என்பதை முடிவு பண்ணிக்குங்க. நான் இந்த சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அந்த ஆடியோவில் மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Conclusion:திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி பயனாளிகளுக்கு வீடு வழங்குவது தாமதமாவது தொடர்பாக, ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் ஊரக வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகளை எச்சரிக்கும் விதத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Last Updated : Oct 19, 2019, 7:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.