திருவண்ணாமலை மாவட்டம், ஒட்டக்குடிசல் கிராமத்தின் வழியே பெங்களூரு சென்ற கார் கட்டுபாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் காரில் இருந்த ஐந்துபேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இறந்தவர்கள் அனைவரும் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அண்ணாமலையாரை தரிசித்து விட்டு வீடு திரும்பியபோது இந்த கோர விபத்து நடந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தால் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


டி