திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள மூன்றாம் பிரகாரம் கல்யாண மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த பணியில் சில்லறை காசு எண்ண உதவிய இயந்திரம் பக்தர்களால் அண்ணாமலையார் ஆலயத்திற்கு காணிக்கையாக வழங்கப்பட்டது.
இந்த உண்டியில் காணிக்கை எண்ணிக்கையில் மொத்தமாக தங்கம் 311 கிராமும், வெள்ளி 1314 கிராமும், பணம் 1 கோடியே 42 லட்சத்து 61 ஆயிரத்து 600 ரூபாயும் கிடைத்துள்ளது. சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கோயில் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ரூ.6,000 கோடி கடனில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி