thiruvannamalai annamalaiyar temple: பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கரோனா இரண்டாம் அலை ஊரடங்கு முடிந்த நிலையில் ஜூலை மாதம் 5ஆம் தேதி திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டது.
இந்நிலையில் கரோனா தொற்று பரவல் காரணமாக இந்த முறையும் கிரிவலம் செல்ல மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தடை விதித்திருந்தார்.
இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று(ஜன.07) நடைபெற்றது.
ஆவணி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை
கோயில் ஊழியர்கள், மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 50 உண்டியல்களில் சேகரிக்கப்பட்ட காணிக்கை வகைப்படுத்தி கணக்கிடப்பட்டது.
கோயில் உண்டியலில் 1 கோடியே 78 லட்சத்து 89 ஆயிரத்து 35 ரூபாய் மற்றும் 363 கிராம் தங்கம், 1.109 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
இதனிடையே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் வரும் 9ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட 3 நாட்களில் தரிசனத்துக்காக பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என கோயில் இணை ஆணையர் கே.பி. அசோக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், கோயிலில் வழக்கம் போல தினசரி நடைபெறும் 6 கால பூஜைகள் மற்றும் வழிபாடு தடையின்றி நடைபெறும். மேலும், உத்ராயண புண்ணிய கால உற்சவ வழிபாடும் வழக்கம் போல நடைபெறும். எனவே, அண்ணாமலையார் கோயிலுக்குள் குருக்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராஜேந்திர பாலாஜியை பிடிக்க உதவிய கார் டயர்