கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிறுவனங்கள், தொழில் அதிபர்கள் நிவாரண நிதி வழங்க வேண்டும் என இரண்டாவது முறையாக கோரிக்கை விடுத்திருந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, கரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பிற்காக திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் சார்பில் நிதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமியிடம் முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.
இதையும் படிங்க: 21 நாட்கள் லாக்டவுன்; தமிழ்நாடு கடந்த வந்த பாதை