ETV Bharat / state

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா: பந்தல்கால் நடும் விழா! - Thiruvannamalai Thirukarthigai

திருவண்ணாமலை: அருணாசலேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பூர்வாங்க பணிகளுக்காக நடைபெற்ற பந்தல்கால் நடும் விழாவில் மாவட்ட ஆட்சியர், கட்டளைதார்கள், உபயதாரர்கள், கோயில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பந்தக்கால்
பந்தக்கால்
author img

By

Published : Sep 28, 2020, 3:30 PM IST

திருவண்ணாமலையில் உள்ள பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகின்ற நினைத்தாலே முக்தி தரும் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்கப் பணிகளுக்காக ராஜகோபுரம் முன்பு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பந்தக்கால் நடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களின்றி இவ்விழா நடத்தப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் பத்து நாள்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இந்த ஆண்டு வரும் நவம்பர் 20 அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி 29ஆம் தேதியன்று அதிகாலை 4 மணியளவில் பரணி தீபமும், மாலையில் ஆறு மணிக்கு இரண்டாயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

பத்து நாள்கள் நடைபெறும் தீபத்திருவிழாவின் பூர்வாங்கப் பணிகளுக்காக இன்று திருக்கோயிலில் பந்தல்காலுக்கு சிறப்பு திருமுழுக்கு ஆராதனை நடைபெற்றது.

பந்தக்கால் நடும் விழா
பந்தக்கால் நடும் விழா

அதனைத் தொடர்ந்து திருக்கோயிலிலிருந்து பந்தக்கால் கொண்டுவரப்பட்டு விநாயகர், முருகர், மகா ரதம், சண்டிகேஷ்வரர் உள்ளிட்ட திருத்தேர்களுக்குச் சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் ராஜ கோபுரம் முன்பு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பந்தக்கால் நடப்பட்டது.

பந்தக்கால் நடும் விழாவைத் தொடர்ந்து கார்த்திகை தீபத்திருவிழாவின் 10 நாள்களுக்கு காலையும் மாலையும் சுவாமிகள் மாடவீதி உலா வரும் விமானங்களும் திருத்தேர்களும் பழுதுபார்க்கப்பட்டு வண்ணங்கள் பூசும் பணி இன்று முதல் தொடங்கி நடைபெற உள்ளது.

கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையாகப் பந்தக்கால் நடும் விழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை, இதனால் பக்தர்களின்றி கோயிலின் கட்டளைதார்கள், உபயதாரர்கள், கோயில் நிர்வாகிகள் மட்டும் பந்தல்கால் நடும் விழாவில் கலந்துகொண்டனர்.

விழாவில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ஞானசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.