திருவண்ணாமலை: கார்ணாம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் பூவரசன். அவருடைய சொந்த பணிக்காக டிராக்டர் எடுத்து சென்றுவிட்டு பின்னர் பணி முடித்து ஊராட்சி மன்றத்தலைவர் பாபு என்பவரது வீட்டின் அருகே நிறுத்தியுள்ளார். அப்போது அருகே இருந்த கிணற்றில் எதிர்பாராத விதமாக டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் டிராக்டர் ஓட்டி வந்த பூவரசன் கிணற்றின் உள்ளே இருந்த மோட்டார் கயிறு பிடித்து வெளியே ஏறினார். ஆனால், அவருடன் அமர்ந்திருந்த குமரன் என்பவர் கிணற்றில் மூழ்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கீழ்பென்னாத்தூர் காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை, தீயணைப்பு மற்ரும் மீட்புத்துறை வீரர்கள் குமரன் சடலத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர், குமரன் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து கிணற்றில் இருந்த டிராக்டரை கிரேன் மூலமாக மீட்டனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கணவனை அழைத்துவர இருசக்கர வாகனத்தில் சென்ற மனைவி: லாரி மோதி உயிரிழப்பு