ETV Bharat / state

கீழ்நமண்டி அகழாய்வு பணிகள் துவக்கம் - காணொலி மூலம் முதலமைச்சர் துவக்கி வைத்தார்! - முதல்வர் ஸ்டாலின்

ரூ 30 லட்சம் மதிப்பிலான கீழ்நமண்டி கிராமத்தின் அகழாய்வு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 7, 2023, 10:09 AM IST

திருவண்ணாமலை: வந்தவாசியிலிருந்து 18 கிலோ மீட்டர் தென்மேற்கிலும், செஞ்சியில் இருந்து 23 கிலோ மீட்டர் வடகிழக்கிலும் அமைந்துள்ளது கீழ்நமண்டி கிராமம். இந்த கிராமப் பகுதியில், பெருங்கற்கால இடுகாடு அமைந்து உள்ளது. சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த இடத்தில் 200க்கும் மேற்பட்ட பெருங்கற்கால கல் வட்டங்கள் உள்ளன. சில சேதமடைந்த கல் வட்டங்களினுள் ஈமப்பேழையின் எச்சங்கள் காணப்படுகின்றன.

இங்கே அமைந்துள்ள கல் வட்டங்கள் 3 முதல் 5 மீட்டர் வரை விட்டத்தை கொண்டதாக உள்ளன. கல் வட்டங்களைத் தவிர, இந்த தளத்தில் குத்துக்கல், கற்களில் கப் அடையாளங்கள் மற்றும் மெருகூட்டப் பயன்படுத்தப்பட்டப் பள்ளங்களும் காணப்படுகின்றன. இரும்பு காலத்தை சார்ந்த மண்பாண்டங்களான கருப்பு - சிவப்பு பானை ஓடுகள் மற்றும் மெருகூட்டப்பட்ட சிவப்பு பானை ஒடுகள் மேற்பரப்பு ஆய்வில் நல்ல எண்ணிக்கையில் காணப்படுகின்றன. மெருகூட்டப்பட்ட சிவப்பு பானை ஒடுகள் மற்றும் கருப்பு - சிவப்பு பானை ஒடுகள் இரண்டிலும் குறியீட்டு அடையாளங்கள் உள்ளன.

இது குறித்து குண்ணகம்பூண்டி கிராமத்தை சேர்ந்த அகழ்வாராய்ச்சி ஆர்வலரும் மின்வாரிய அலுவலருமான பழனி கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில் பழங்கால பானைகளை கண்டெடுத்து வருவாய்த்துறையில் ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து ஈமப்பேழையின் துண்டுகளும் மேற்பரப்பு ஆய்வில் கண்டெடுக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து, இந்த இடத்தில் அகழாய்வுப் பணிகள் நடத்த அரசுத் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டன. முதற்கட்ட அகழாய்வு பணிகளுக்கு 30 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் கைது - கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.