திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை பகுதியில் உள்ள அறம்வளர்த்தநாயகி சமேத கைலாசநாதர் திருக்கோயிலில், 43ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தினமும் அறம்வளர்த்தநாயகிக்கு மங்களப் பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் மதுரை மீனாட்சி, ராஜராஜேஸ்வரி, காமாட்சி ஆகிய அலங்காரங்களில் அறம்வளர்த்தநாயகி காட்சியளித்தார்.
நவராத்திரியின் ஆறாம் நாளான இன்று 38 லட்சம் ரூபாய் பணத்தாலும், 150 சவரன் தங்க நகைகளாலும் அலங்கரிக்கப்பட்ட கஜலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: ஆயுதபூஜை: பரமத்தி வேலூரில் வாழைத்தார் ஏலம் வீழ்ச்சி!